உங்களுக்கு சோர்வில் இருந்து சுறுசுறுப்பு ஆக மாற வேண்டுமா இத படிங்க நீங்கள் சாதனையாளராக மாற முடியும்
நீங்கள் இன்று சோர்வாக உங்களை கருதுகிறீர்களா , மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள். வாழ்க்கை என்றால் துன்பம், இன்பம் கலந்ததுதான் வாழ்க்கை . ஆம் தொந்தரவு, மன அழுத்தம் , பிரச்சனை எல்லாம் கலந்ததுதானே வாழ்க்கை.
சாதனை என்பது அணைத்து மனிதர்களுக்கும் உரிமையுள்ள ஒரு லட்சியமாக கருதப்படுகிறது. அத்தகைய சாதனை புரிய இந்த வாசகம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வாழ்க்கையில் வலி இல்லாமல் எதுவும் இல்லை, தோல்வி என்பது வெற்றியின் படிகள் என்பது நாம் அனைவருக்கும் தெரியும்.
தன்னபிக்கை இருந்தால் வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் வெற்றி பெற முடியும் என்பதற்கு பற்பல சாதனையாளர்களை நாம் பார்த்திருக்கிறோம்.
அதனால் முதலில் எரிச்சலை விடுங்கள். நாம் சோம்பலாக இருந்தால் என்ன நடக்கும். நாம் வாழ்நாளில் சில பல நேரங்கள் வீணாக போகும்.
நாம் நம்முடைய நேரத்தை பொன் போன்று காப்பாற்ற வேண்டும். அதை நாம் வீணடிக்க கூடாது. வாழ்க்கையில் எதுவும் கடினம் இல்லை. நம் மனதை மற்றும் நம் மீது தன்னம்பிக்கை வேண்டும். நம்மால் முடியும் என்று நாம் வேண்டும்.
வாழ்க்கையில் முன்னுக்கு வந்த அனைவரும் அவைகள் வேலைகளை முதலில் திட்டமிடுவார்கள். நாம் எதை முதலில் செய்ய வேண்டும், அதை எவ்வாறு செய்ய வேண்டும். இன்று திட்டத்தின் செயல் என்ன, அதை எவ்வாறு முடிக்க வேண்டும். இதே போல் உங்கள் வாழ்க்கை மற்றும் உங்கள் வேலையை பொறுத்து நீங்கள் திட்டமிட வேண்டும்.
நேர்மை முறை
அதே போல் நாம் எந்த விஷயம் செய்தாலும் அதில் நேர்மையாக கையாள வேண்டும். முயற்சி செய்தால் முடியாதது ஒன்றும் இல்லை அல்லவா! நாம் நேர்மையான முறையில் தொழில் செய்வது நன்று. சிலர் தொழில் இல்லாமல் வேலைக்கு செல்பவரானால் உங்கள் அலுவலகத்தில் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்.
உங்கள் சிந்தனை எப்போதும் பெரியதாக இருக்க வேண்டும்.
முன்பு சொன்னதுபோல் நாம் வாழ்க்கையில் எப்போதும் பெரிய அளவில் சிந்திக்க வேண்டும். அப்போதுதான் நம் இலட்சியத்தை நாம் அடையமுடியும். லட்சியம் சிறியதாக இருந்தால் அது பெரிய பலனை கொடுக்காது, அது மட்டுமின்றி உங்கள் பலம் என்ன என்பது உங்களுக்கு தெரியாது. எனவே நீங்கள் சிந்திப்பது பெரிய அளவில் இருக்க வேண்டும்,.
உங்களுக்கு என்ன பிடிக்கும் என்று கண்டுபிடியுங்கள்
இது மிகவும் முக்கியமான ஒரு விஷயம். என்னவென்றால் நாம் சோர்வாக இருக்கும் பொது அதிலிருந்து வெளியே வர வேண்டுமென்றால் நமக்கு பிடித்த காரியத்தை செய்ய வேண்டும். உதாரணமாக எனக்கு பாடல் கேட்க பிடிக்கும். எப்போது நான் சோர்வாக இருக்கிரேனோ அப்போது பாடல் கேட்டு என்னை நான் சுறுசுறுப்பாக மாற்ற முயற்சி செய்வேன், அதில் நான் பலனும் அடைந்துள்ளேன். அதனால் தான் இந்த விஷயம் உங்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்.
தோல்வியை கண்டு பயப்பட வேண்டாம்.
முதலில் நாம் ஒன்றை நினைவு கூற வேண்டும். தாமஸ் எடிசன் 1000 முறை தோல்வி அடைந்து, பின்னர் எரியும் விளக்கை கண்டு பிடித்தார். இது ஒரு உதாரணம். வாழ்க்கையில் வெற்றி உடனே வருவதில்லை.
நாம் அதற்கான முயற்சி, பொறுமை, தன்னம்பிக்கை வைக்க வேண்டும்.
யோசனைகளை உருவாக்க வேண்டும்.
உங்கள் தொழிலோ அல்லது வேலையிலோ நீங்கள் எப்படி முன்னுக்கு வரவேண்டும் என்று சிந்தனையை வளர்க்க வேண்டும். இது ஒரு நல்ல முயற்சியாக இருக்கும்.
வரம்புகளைத் தள்ளுங்கள்
நீங்கள் சாதிக்க வேண்டுமென்றால் கண்டிப்பாக உங்கள் வரம்புகளை தள்ள வேண்டும். உங்களுக்கு எட்டிய தூரத்தை விட அதிகமாக சிந்திக்க வேண்டும். அபோதுதான் உங்களுக்கு உங்கள் கடமை பற்றிய ஆழம் தெரியும். நீங்கள் நாள் ஒன்றுக்கு 4 மணி நேரம் செலவழித்து ஒரு விஷயம் செய்தால் கண்டிப்பாக அந்த வேலையில் நீங்கள் மேதை ஆவீர்கள். இது கட்டாயம் நடக்கும் என்று ஆய்வில் தெரிகிறது.
இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும்.
உங்கள் இலக்கு எட்டாத இடத்தில இருக்க வேண்டும். அது மிக கடினமானதாக நிர்ணயிக்க வேண்டும். அதற்கு நீங்கள் அரும்பாடு பட வேண்டும். அதற்கு அப்போதுதான் மரியாதையாக இருக்கும்.
உங்கள் இலக்குகளை அடுத்தவர்கள் கேட்கும் பொது அது அவர்களுக்கு சில நேரங்களில் கேலியா கூட இருக்கும். ஆனால் நீங்கள் எந்த நேரத்திலும் உங்கள் தொடர் முயற்சியில் இருந்து சிறிதளவு கூட மனம் தளர கூடாது.
வாய்ப்பை உருவாக்குவது எப்படி
நாம் எப்படி ஒரு வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்றால் முயற்சி என்ற ஆயுதத்தை எடுக்க வேண்டும். தீவிரமாக முயற்சி செய்ய வேண்டும். நல்ல வாய்ப்புகளை பெறுவதற்கு முன் பல சோதனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். இருந்தாலும் நாம் முயற்சியை தளர விடாமல் முயல வேண்டும். திட்டமிடுதல் அந்த திட்டத்தை செயல் படுத்துவதில் கவனமாக இருந்தால் கண்டிப்பாக வாய்ப்பை நாம் உருவாக்க முடியும். தோல்வி என்பது வெற்றியின் எதிர்முனை அல்ல அதுவும் ஒரு விதமான வெற்றி தான்.
அதுமதுவுமின்றி நீங்கள் கற்றுக்கொள்ள மறவாதீர். நீங்கள் எந்த துறையில் சாதிக்க வேண்டுமோ அந்த துறையில் தினமும் ஏதாவது கற்றுக் கொண்டே இருங்கள்.
உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை
தன்னை நம்பாமல் இருந்தால் வாழ்க்கையில் சாதிக்க முடியாது.
இது உண்மை. உங்கள் மீது உங்களுக்கு கண்டிப்பாக நம்பிக்கை வேண்டும். அது உங்களுடைய தன்னம்பிக்கையை வளர்க்கும்.
வாழ்க்கையில் சாதித்த அனைவரும் அவர்கள் மீது அவர்கள் நம்பிக்கை வைத்தார்கள். நம் திறமை குறைவாக இருந்தாலும் நம் மீது நாம் நம்பிக்கை வைக்கும் பொது அந்த திறமையில் பல மடங்கு வெளிப்படும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.
உங்களை பயமுறுத்தும் ஒரு காரியத்தை தினமும் செய்யுங்கள்
இது என்ன புதிதாக இருக்கிறது என்று நினைப்பீர்கள். அதாவது நான் சில விஷயத்தில் பலவீனமாக இருக்கிறேன் என்று நினைத்து இருக்கலாம். அந்த விஷயத்தில் நாம் அதிக அக்கறை மற்றும் கவனம் செலுத்த வேண்டும் என்று சொல்கிறார்கள். நாம் எந்த விஷயத்தில் பலவீனமாக இருக்கிறோமோ அந்த விஷயத்தில் அதிக பயிற்சி செய்து நம் திறமையை வலிமையாக மாற்ற முடியும். பயிற்சி செய்து எல்லாவற்றையும் சாதிக்க முடியும் என்பதை நம்ப வேண்டும்.
மேலே கூறியிருந்த கருத்துக்கள் மிகவும் அவசியமான ஒன்றாக கருதி நீங்கள் வாழ்க்கையில் சாதிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
Comments
Post a Comment